நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவலின் நிலைமை
மற்றும் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு பார்க்கும் போது, இலங்கை தற்போது சிவப்பு வலயத்திற்குள் இருப்பதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அதன் அந்த சங்கத்தின் உபதலைவர் விசேட வைத்தியர் மனில்க சுமனதிலக தெரிவித்தார்.
இலங்கையை பச்சை வலயத்திற்குள் கொண்டுவர வேண்டுமெனில் தற்போது பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையை 950ஆக குறைக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வேறுபாட்டை எதிர்வரும் ஒரு வாரத்தில் காணமுடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

0 கருத்துகள்