ரிஷாத் பதியுதீன் சார்பில் வெள்ளிக்கிழமை நீதிமன்றில் சிறப்பு வாதங்கள்!

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சார்பில் விசேட வாதங்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி முன் வைக்கப்படவுள்ளன.

இதற்கான அனுமதியை இன்று (01) கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே வழங்கினார். அதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா சிறப்பு வாதங்களை முன்வைக்கவுள்ளார்.

இதற்கிடையே நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை, இது தொடர்பில் எழுத்து மூல சமர்ப்பணங்களை நீதிமன்றில் முன்வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கொவிட் -19 நிலைமை காரணமாக சந்தேக நபர்கள் எவரும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவில்லை. ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக சந்தேக நபர்களை நீதிவான் மேற்பார்வை செய்தார். சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்புக்காக இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் சந்தேக நபர்களின் விளக்கமறியல் 7 ஆம் திகதிவரை நீடித்து கோட்டை நீதிவான் பீர்யந்த லியனகே உத்தரவிட்டார்.

அன்றைய தினமே ரிஷாத் பதியுதீன் சார்பில் வாதங்களை முன்வைக்கவும் நீதிவான் அனுமதியளித்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்