எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக மக்களை ஒன்று திரட்டும் பட்சத்தில் மீண்டும் கொவிட் பரவக்கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என நாம் கூறவில்லை, எதிர்ப்பு நடவடிக்கை என்ற அடிப்படையில், பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றே நாங்கள் கூறுகின்றோம்.
எதிர்ப்பை வெளியிடுவதற்கான வேறு முறைமைகள் குறித்து தங்களுக்கு பிரச்சினை இல்லை.
இந்த நோய் பரவுவதற்கு ஏதுவாகும் வகையில், பொதுமக்கள் ஒன்றுகூடுவார்களாயின், அது நாட்டு மக்களையே ஆபத்திற்குள் தள்ளுவதற்காக திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாகவே அர்த்தப்படுத்த வேண்டி ஏற்படுவதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்

0 கருத்துகள்