பட்ஜெட் 2ஆம் முறை வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை..!

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொதுஜன பெரமுன கட்சி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பின் போது அரசாங்கத்துக்கு ஆதரவாக 153 வாக்குகள் கிடைத்தன.
சுகவீனம் காரணமாக மூன்று பாராளுமன்ற உறுப்பினர் கள் வாக்கெடுப் பின் போது பாராளுமன்றத்துக்கு சமுக மளிக்கவில்லை என அறிவித்துள்ள நிலையில் விதுர விக்ரமநாயக்க மற்றும் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்துகொள்வதாக அறிவித்திருந்த போதிலும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள வரவில்லை என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு கட்டுப்பாட்டுடன் கட்சியின் வேலைகளில் கலந்துகொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதால், இவர்கள் இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்