முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் சுயாதீன ஊடகவியலாளர் விஸ்வசந்திரன் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ், மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பொலிஸாரினால் இன்று (28) காலை இந்த இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில், முள்ளிவாய்க்கால் பெயர் பலகையை வீடியோ பதிவு செய்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
சம்பவத்தில் காயமடைந்த ஊடகவியலாளர் பொலிஸாரின் உதவியுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், ஊடகவியலாளர் மீதான தாக்குதலை கண்டித்து, முல்லைத்தீவு நகரில் இன்று (28) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையிலேயே, மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்