பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் 76ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாட்டின் பிரதமரினதும் மக்களதும் நலன் வேண்டிய சர்வமத சிறப்புப் பிரார்த்தனை வழிபாடுகள் நாடு பூராகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இன்று (18) அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்தில் உள்ள ஜாமியுத் தைய்யார் ஜும்மா பள்ளிவாசலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேச செயற்குழு தலைவர் இர்ஷாத் அதாப்பின் ஏற்பாட்டில் கட்சியின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அஹமட் புர்க்கானின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது
இதன்படி ஜும்மா பள்ளிவாசலில் ஒன்று கூடிய பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் மௌலவிமார்கள் இணைந்து துஆ பிரார்த்தனை வழிபாடுகளை மேற்கொண்டனர்.
மேலும் பிரதமரின் பிறந்த நாளில் குறித்த பள்ளிவாசலில் பயன்தரு மரங்கள் நடுகை செய்யப்பட்டதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட மௌலவிமார்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை பிரதமரின் நலன் வேண்டிய இப்பிரார்த்தனைகளை ஏனைய இடங்களிலும் முன்னெடுப்பதற்கும் ஏற்பாட்டு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அஹமட் புர்க்கான் தெரிவித்துள்ளார்.