இலங்கையில் கஞ்சா ஏற்றுமதிக்கு சட்ட அனுமதி?



எதிர்வரும் 3 மாதங்களுக்குள் கஞ்சாவை ஏற்றுமதிக்காக மாத்திரம் சட்ட அனுமதியை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுதேச வைத்திய முறைகளின் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான சட்டமூலம் ஒன்றினை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை, அண்மையில் கஞ்சா இறைவன் எமக்கு தந்தது, இதை பயிரிட்டு ஏற்றுமதி மற்றும் மருந்து பொருட்களுக்கு பயன்படுத்த வேண்டும் என பெண் எம்.பி ஒருவர் பாராளுமன்றில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

- battinews

கருத்துரையிடுக

0 கருத்துகள்