இலங்கை பொலிஸாருக்கு இனி பயிற்சிகள் கிடையாது- ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸ் அறிவிப்பு!


இலங்கை பொலிஸாருக்கு பயிற்சிகளை வழங்குவதை நிறுத்துவதற்கு ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸ் தீர்மானித்துள்ளது.


மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக குறித்த பொலிஸ் பிரிவு குறிப்பிட்டுள்ளது.


இலங்கைக்கு வழங்கிய இணக்கப்பாட்டுக்கு அமைவாக, 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இலங்கை பொலிஸாருக்கு ஸ்கொட்லன்ட்யார்ட் விசேட பயிற்சி வழங்கப்படவுள்ளது.


எவ்வாறாயினும், குறித்த காலப்பகுதியுடன் தமது ஒப்பந்தத்தை புதுப்பிக்கப் போவதில்லை என ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார் அறிவித்துள்ளனர்.


இந்த தீர்மானத்தை பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸ் பிரதானி தெரிவி த்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்