பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள், சர்வதேச தர நிர்ணயத்திற்கு முரணானது என தெரிவித்து, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன, பொலிஸ் மாஅதிபர் C.T.விக்ரமரத்னவிடம் முறைபாடு செய்துள்ளார்.
எரிபொருள் தரம் குறித்து, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்திற்கு பல முறைபாடுகள் கிடைத்துள்ளமையினால், இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி, உண்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துமாறு, கெமுணு விஜேரத்ன, பொலிஸ் மாஅதிபரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பஸ்களுக்கு பயன்படுத்தப்படும் ஒடோ டீசலின் செயற்பாடு தொடர்பில், பஸ் உரிமையாளர்களிடமிருந்து அதிகளவான முறைபாடுகள் கிடைத்துள்ளதாக அவர் தனது முறைபாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று, கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பெற்றோல் அதிகளவில் வீண்விரயமாகும் விதத்தில் செயற்படுவதாகவும், அது குறித்தும் விசாரணைகளை நடத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 கருத்துகள்