மஹிந்தவின் இடத்திற்கு மஞ்சு லலித் வர்ண குமார நியமனம்



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவின் இராஜினாமாவைத் தொடர்ந்து வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மஞ்சு லலித் வர்ண குமாரவை நியமிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு இதை தீர்மானித்துள்ளது.

இன்று இதற்கான தீர்மானத்தை எட்டியதுடன், அது தொடர்பான வர்த்தமானியும் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹிந்த சமரசிங்க அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவிற்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதால், அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்