அனைத்து அரச சேவையாளர்களையும் நிர்வகிக்கும் வகையில் குறைந்தது 18 ஆயிரம் ரூபா சம்பளம் அல்லது விசேட கொடுப்பனவு அதிகரிப்பை இம்முறை சமர்ப்பிக்கப்பட்டு வரவு செலவுத் திட்டத்தில் பெற்றுக்கொடுக்க விட்டால் தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்ல நேரிடும் என்று ஸ்ரீலங்கா அரச அதிகாரிகளின் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த கூட்டமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பீ.ஏ.பி. பஸ்நாக்கவின் கையொப்பமிடப்பட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனையில் அரச சேவையாளர்கள் தொடர்பில் அக்கறை செலுத்தாமை தொடர்பில் அரச அதிகாரிகள் தொழிற்சங்க கூட்டமைப்பு ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சருக்கு இந்த கடிதம் நேற்று (13) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்