கழிவு நீருக்குள் பறந்த சின்ன சிலிண்டர்




ஜூட் சமந்த

ஆராச்சி கட்டுவ வைரன்கட்டுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைக்கப்பட்டிருந்த சிறிய சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதை அடுத்து, அந்த சிலிண்டரை தூக்கி, கழிவு நீர் தேங்கியிருந்த பகுதியில் வீசியெறிந்துள்ளனர்.

கசிவு ஏற்பட்டதன் பின்னர், தீப்பிடித்து கொண்டிருந்த நிலையிலேயே அச்சிலிண்டரை தூக்கியெறிந்துள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று (28) கொள்வனவுச் ​செய்து வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்த ஐந்து கிலோகிராம் நிறையைக் கொண்ட காஸ் சிலிண்டரை, இணைக்கும் போதே கசிவு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்தை பற்றியுள்ளது. உடனடியாக செயற்பட்டமையால், உயிர்ச் சேதங்களோ, சொத்துச் சேதங்களோ ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்