பா.நிரோஸ்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கோபால் பாக்லே சந்திருப்பது தமிழர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு சிறந்தத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டத்தின் நேற்றைய (26) குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், இவ்விருவரின் சந்திப்பு முக்கியமானது என்றார்.
இலங்கை மீனவர்கள் பிரச்சினை, இலங்கை, வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் எனவும் கூறியதோடு, மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை, உருளைக்கிழங்கின் விதைகள் இறக்குமதி செய்யப்படுவதற்குப் பதிலாக அதனை உள்நாட்டில் உற்பத்தில் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது 50 கிலோகிராம் உருளைக்கிழங்கு விதை, 23 ஆயிரம் ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்படுகிறது. அதற்கிணங்க உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமை உற்பத்தி செய்வதற்கு நூறு ரூபாய் விவசாயிகளுக்கு செலவாகிறது.
அவர்கள் அதனை 150 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
0 கருத்துகள்