எதிர்காலத்திலும் எமக்கே வெற்றி : மக்களுக்கு மேலும் பல சேவைகளை வழங்க நடவடிக்கை – பசில் ராஜபகஷ

எதிர்காலத்தில் தங்களது கட்சிக்கு கிடைக்கும் வெற்றியின் ஊடாக மக்களுக்கு மேலும் பல சேவைகளை வழங்கவுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர், நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


தற்போது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையை வெல்வதற்காக அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதற்காக ஆதரவாளர்களுக்கும் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.


அத்தோடு, கட்சியை கட்டியெழுப்புவதற்கு உதவி புரிந்த கட்சியின் உள்ளேயும் வெளியேயும் இருக்கும் அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 5ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்