நீங்கள் எங்களைத் தோற்கடித்தீர்கள்.., மீண்டும் எங்களையே தேர்ந்தெடுக்கிறீர்கள். என்ன பயன்?" புதிய நபர்களைத் தேடுங்கள்




"நீங்கள் எங்களைத் தோற்கடித்தீர்கள்.., மீண்டும் எங்களையே

தேர்ந்தெடுக்கிறீர்கள்.

 என்ன பயன்?"  புதிய நபர்களைத் தேடுங்கள் என்று ஜனாதிபதி பொதுமக்களிடம் தெரிவித்தார்.


உலக விஞ்ஞான தினத்தையொட்டி, இலங்கையின் தேசிய விஞ்ஞான தினம் மற்றும் விஞ்ஞான வாரத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு, அலரிமாளிகையில் இன்று  இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.


 அரசியல்வாதிகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


 “5 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு, எதிர்க்கட்சி தோல்வியடைந்தது, அதனால்தான் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.  இப்போது 2 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் நாட்டை ஆளாதது போல் செயல்படுகின்றன.


 “இந்த சிஸ்டத்தை மாற்ற வேண்டும்.  உங்களது எதிர்பார்ப்பை நானோ அல்லது அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களோ பூர்த்தி செய்யாவிட்டாலும், ஒரே மாதிரியான மக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.  புதிய நபர்களைத் தேடுங்கள்” என்று ஜனாதிபதி கூறினார்.


 "இது எப்படி சாத்தியம் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அதுதான் உண்மை.  ஒருமுறை எங்களை விரட்டியடித்தால், மீண்டும் எங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்.  அதில் என்ன பிரயோஜனம்?'' என்று   நிகழ்வில் உரையாற்றிய அவர் கூறினார்.


 நாட்டின் நலனுக்காக அரசாங்கத்தின் நல்ல செயல்களுக்கு பொறுப்பான எதிர்க்கட்சி ஆதரவளிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.


நாடு திறக்கப்பட்டு புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் அனைத்துச் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் காரணமாக மீண்டும் கொவிட் தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


இதனால், நாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம். இதனால், பொதுமக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டுமென்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.


“எனது பதவிக்காலத்தில் இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. இந்தக் காலப்பகுதியில், கொவிட் தொற்றுப் பரவலில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான பாரிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவேண்டி ஏற்பட்டது.


அன்று ஆட்சி அதிகாரத்தில் இருந்த இன்றைய எதிர்க்கட்சியினர், இந்த நிலைமையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஐந்து வருடகால ஆட்சியின் போது ஏற்பட்ட தோல்விகள் மற்றும் பலவீனங்கள் காரணமாகவே, அவர்களுக்குப் பதிலாக என்னை இந்நாட்டு மக்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தனர். இருப்பினும், எந்தவோர் அதிகார பலமும் இருந்திருக்காதவர்கள் போல் இன்று எதிர்க்கட்சியினர் செயற்படுவது கவலையளிக்கிறது.


இந்த முறைமையை மாற்றுவது எதிர்காலத்துக்கான தற்காலத் தேவையாக உள்ளது” என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.


தற்கால உலகின் அனைத்துத் துறைகளிலும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் ஆளுகை காணப்படுகின்றது. புதிய தொழில்நுட்ப அறிவின்றி எமது எதிர்காலச் சந்ததியினர் இந்த உலகத்துடன் முன்னோக்கிச் செல்ல முடியாது. அதனைப் புரிந்துகொண்டு, புதிய தொழல்நுட்பத்துடன்கூடிய எதிர்காலச் சந்ததியினருக்கான கல்வி மாற்றங்களைச் செய்வது அவசரத் தேவையாகக் காணப்படுகிறதென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்