பதுளை சிறைச்சாலையில் மோதல்: 5 கைதிகள் மருத்துவமனையில் அனுமதி






பதுளை சிறைச்சாலைக்குள் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.




இந்த மோதல் சம்பவத்தில் 5 கைதிகள் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார்.




இவ்வாறு காயமடைந்த கைதிகள் அனைவரும் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




மேலும், சம்பவம் குறித்த விரிவான விசாரணைகளை சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்