மினுவாங்கொட, யகஹடுவ பகுதியில் உள்ள வீடொன்றில் (23) இரவு தீ பரவியுள்ளது.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயினால் வீடு முற்றிலும் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தீயினால் சுமார் 8 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
எரிவாயு கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 கருத்துகள்