இன்று முதல் மீண்டும் மின்சார தடை : அறிவிப்பு வெளியானது




நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று (11) முதல் 30 நிமிட மின்சார விநியோக தடை ஏற்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன்படி, இன்று தொடக்கம் மாலை 6 மணி முதல் இரவு 9:30 வரையான காலப் பகுதிக்குள் 30 நிமிட மின்சார விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே இந்த மின் விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்