"இலங்கை இராணுவம் பல்வேறு பயிற்சித் தொகுதிகள் மற்றும்
பயிற்சிகளையும் அறிமுகப்படுத்தும் அதேவேளை நடைமுறைக்கு உகந்த வகையிலான மிக உயரிய போர்த் தயார் நிலையைகளைப் பேணுகிறது.
எல்.ரீ.ரீ.ஈ உடனான மூன்று தசாப்த கால மோதலின் போது பெறப்பட்ட சொந்த அனுபவங்களின் அடிப்படையில் திறனமிக்க நவீன போர் நுட்பங்களுடனான எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராகிவருகிறது.
போர் அல்லது சமாதானம் உள்ளிட்ட எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் ஒரு சிப்பாய் எப்போதும் தோற்கடிக்க முடியாத சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஏனெனில் நவீன எதிரிகள் வழக்கத்திற்கு மாறானவர்கள், குறிப்பாக அவர்களின் சிறிய செயற்பாடுகள், மிகப்பெரிய பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடியவை.
அதேபோல் 20 ஆம் நூற்றாண்டில் நாடுகளுக்கிடையில் ஏற்படக்கூடிய மோதல்களானது அந்த நாடுகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளதை போன்றே மற்றைய நாடுகளுக்கும் சிக்கல்களை தோற்றுவிக்க கூடியதாக உள்ளது.
இராணுவ அழுத்தமானது அதிக சவால் நிலைமைகளாக காணப்படும் பொருளாதார, இராஜதந்திர மற்றும் உளவியல் நெருக்கடிகள் ஆகியவற்றுடன் பிணைந்ததாக காணப்படுகிறது. அடிப்படைவாதம் மற்றும் கருத்தியல் அடிப்படையிலான மோதல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குறிப்பாக நவீன எதிரிகளை பொறுத்தவரையில் நபர்கள் மற்றும் ஆயுதங்களை விடவும் அவர்கள் கையாளும் வழிமுறைகள் மிகவும் சிக்கலான வகையில் அமைந்துள்ளன என்று பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் 08.12.2021 காலை சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் 15 ஆம் இலக்க பாடநெறியை பூர்த்தி செய்து 'பிஎஸ்சி' பட்டம் பெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இளங்கலை அதிகாரிகளுக்காக நிகழ்த்திய உரையில் சுட்டிக்காட்டினார்.
'சமகால பாதுகாப்பு பரப்பிற்குள் ஆயுதப்படைகளின் வகிபாகம்' என்ற தொனிப்பொருளில் உரை நிகழ்த்தியிருந்த இராணுவத் தளபதி, இன்றைய பன்முக மற்றும் சிக்கலான பாதுகாப்பு சவால்களுக்கு முகம்கொடுப்பதற்கு இராணுவப் படைகளை நேரடியாகப் பயன்படுத்துவதை விட முறையான, விரிவான மற்றும் பின்னிப்பிணைந்த அணுகுமுறைகள் மற்றும் கட்டமைக்கப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றார்.
"பாதுகாப்பு சார் சூழ்நிலைகள் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது, அதனால் நேரடியான தீர்மானங்களை எடுப்பது கடினமாக அமைந்துள்ளது. எனவே, முன்னைய அனுபவத்தை வைத்து அடுத்த நெருக்கடியை நம்மால் வெல்ல முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நான் உங்களுக்கு கொடுக்கக்கூடிய சிறந்த உதாரணம் கொவிட் 19. தொற்றுநோய்; ஒரு சிறிய வைரஸ் அனைத்து வழக்கமான பாதுகாப்பு பரிமாணங்களையும் மிஞ்சும் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாம் எப்போதாவது நினைத்திருக்கிறோமா? ”என்று அவர் வினவினார்.
இலங்கையின் முப்படையினருக்காக சர்வதேச தரத்திலான கற்பித்தல்களை வழங்கும் களமான சபுகஸ்கந்தவில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக வருகை தந்திருந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு நுழைவாயில் வளாகத்தில் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதோடு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனையடுத்து பாதுகாப்பு கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், பாடநெறி எண் – 15 இன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இளங்கலை பட்டதாரிகளால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் எண்-15 பாடநெறியில், பாகிஸ்தான், பங்களாதேஷ், ருவாண்டா, மாலத்தீவு, இந்தோனேசியா, நேபாளம், அமெரிக்கா, செனகல் மற்றும் சவுதி அரேபியாவை உள்ளிட்ட 17 நாடுகளை சேர்ந்த 144 இளங்கலை பட்டதாரிகள் கலந்துகொண்டனர். அவர்களில் 78 இராணுவ அதிகாரிகள், 23 கடற்படை அதிகாரிகள், 26 விமானப்படை அதிகாரிகளும் பீஎஸ்சீ பட்டத்தை பெற்றுகொண்டனர்.
பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் அக்கல்லூரிக்கு வருகை தந்த விரிவுரையாளருக்கு அன்பான வரவேற்பளித்ததோடு, நிகழ்வின் பங்கேற்பாளர்களுக்கும் அறிமுகம் செய்தார்.
அதேபோல் நிகழ்வின் நிறைவம்சமாக இடம்பெற்ற கேள்வி-பதில் அமர்வைத் தொடர்ந்து இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா அவர்களுக்கு சிறப்பு நினைவு பரிசொன்றை வழங்கி நன்றிகளையும் கூறிக்கொண்டார். கல்லூரி வளாகத்திலிருந்து விடைபெறும் முன்பாக தளபதியவர்களால் கல்லூரியின் விருந்தினர் பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்டார்.
0 கருத்துகள்