இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுஊன்.
பொரித்த மீன் சாப்பிட்டு வாந்தி எடுத்த குழந்தைகளுக்கு மருத்தவ பரிந்துரையின்றி மருந்து வாங்கி கொடுத்ததால் இரு குழுந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
வேலூர் கஸ்பா பஜார் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அன்சார்- சுரேயா தம்பதிக்கு 4 வயதில் ஆஃரின் என்ற பெண் குழந்தையும்.3 வயதில் அசேன் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர்.
இந்த நிலையில் ஆட்டோ ஓட்டி முடித்து மாலை வீடு திரும்பிய அன்சார். சைதாப்பேட்டை பகுதியில் எண்ணெயில் பொரித்த மீன் துண்டுகளை வாங்கி வந்துள்ளார்.
அதனை சாப்பிட்ட இரு குழந்தைகளும் தொடர்ந்து வாந்தி எடுத்ததால் அருகில் இருந்த மருந்தகத்தில் மருந்து வாங்கி இரு குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர்.
இதனால் குழந்தைகளுக்கு உடல் மேலும் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்துள்ளனர்.
இதன் பின்னர் குழந்தைகளை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர்கள் ஏற்கனவே உயிரழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இது நிச்சயம் ஃபுட் பாய்சன் என்கிறார்கள் மருத்துவர்கள் மேலும் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர்தான்
குழந்தைகளின் இறப்புக்கு உண்மை காரணம் தெரிய வரும் என அம்மருத்துவ வைத்தியர்கள் கூறியுள்ளனர் என குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த சின்னஞ்சிறுசுகளின் மரணச்செய்தி வைரலாகியதை பார்த்தவுடன் கண்கள் குலமாகுது.
0 கருத்துகள்