மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

 


சந்தையில் மரக்கறி விலைகள் சிறிதளவு குறைந்துள்ள போதிலும் கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதாக அறியமுடிகிறது.


பொருளாதார நிலையங்களில் நேற்று (09) ஒரு கிலோகிராம் கறிமிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றின் மொத்த விலை 780 ரூபாவாகவும், சில்லறை விலை 800 ரூபாவாகவும் இருந்தது.


ஏனைய மரக்கறிகளில் போஞ்சியின் மொத்த விலை அனைத்து பொருளாதார மையங்களிலும் 400 ரூபாவுக்கு அதிகமாகவே காணப்பட்டது.


அத்துடன், கெரட் 380 ரூபா முதல் 400 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்