தற்போது நாட்டில் இனங்காணப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் தொற்றாளர்களை பார்க்கும்போது, நாட்டில் பலருக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கலாம் என்பது தெளிவாக தெரிவதாக பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, ஒமிக்ரான் வைரஸ் தொற்றுடன் நாட்டில் மேலும் மூவர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களின் செயற்பாடுகளை வைத்துப்பார்க்கும்போது ஒமிக்ரான் வைரஸ் தொற்றுடன் பலர் நாட்டுக்குள் இருக்கக்கூடும் என்பது தெளிவாக தெரிகிறது என்றார்.
எனவே, அடுத்த மூன்று வாரங்களில் நாடுமுழுவதிலும் ஒமிக்ரான் வைரஸ் பரவி, ஒமிக்ரான் தொற்றாளர்கள் பிரதானமாக இனங்காணப்படக்கூடிய ஆபத்துக்காணப்படுகிறது எனவும் கூறினார்.
பிரதானமாக ஒமிக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாயின், நாடு மோசமான நிலைமைகளை சந்திக்கும் என்பதை நினைவில்கொண்டு, பண்டிகைகளை கொண்டாட வேண்டுமெனவும் அவர் கேட்டுகொண்டார்.
0 கருத்துகள்