அரிசி உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் குறைப்பு


நாடு முழுவதும் உள்ள சதொச வர்த்தக நிலையங்களில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்று (12) முதல் குறிப்பிட்ட சில அரிசி வகைகளை 100 ரூபாவிற்கு குறைவான விலைகளில் கொள்வனவு செய்துக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


அத்துடன், சதொச வர்த்தக நிலையங்களில், 50 அத்தியாவசிய பொருட்களை இன்று முதல் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


அதன்படி, 

நாடு அரிசி ஒரு கிலோகிராம் 99 ரூபா 50 சதத்திற்கும்,

சிறந்த சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 130 ரூபா அளவிலும் சதொச வர்த்தக நிலையங்களின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்