பத்து லட்சம் கொரோனா தடுப்பூசிகளை மண்ணில் புதைத்து அழித்தது நைஜீரிய அரசு



நன்கொடையாக பெறப்பட்ட 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நைஜீரிய அரசு அழித்துள்ளது.


ஆப்பிரிக்க நாடுகள் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் கொரோனா தடுப்பூசிகளை தங்கள் மக்களுக்கு செலுத்தி வருகின்றன.


அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலால் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஐரோப்பா, இந்தியா, ரஷ்யா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் நன்கொடையாக வழங்கி வருகின்றன.


உலக சுகாதார அமைப்பு நைஜீரியாவுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. ஆனால் அங்கு போதிய மருத்துவ கட்டமைப்பு இல்லாததால் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது.


இந்நிலையில், நன்கொடையாக பெறப்பட்ட 10 லட்சம் அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகளை நைஜீரிய அரசு மண்ணில் புதைத்து அழித்துள்ளது.


இது தொடர்பாக அந்நாட்டு அரசு கூறுகையில், காலாவதியானதால் 10.66 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மண்ணில் புதைத்து அழிக்கப்பட்டன என தெரிவித்தது.


தடுப்பூசி தொடர்பாக எதிர்மறை தகவல்கள் பரவியதால் தடுப்பூசி செலுத்துவதில் நைஜீரிய மக்கள் தயக்கம் காட்டி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்