Headlines
Loading...
   அமைச்சரவை இப்படிதான் மாற்றப்படும்: அறிவித்தார் ஜனாதிபதி

அமைச்சரவை இப்படிதான் மாற்றப்படும்: அறிவித்தார் ஜனாதிபதி



அரசியலமைப்பின் பிரகாரம் தனது அமைச்சரவையை 30 அமைச்சர்களாக மட்டுப்படுத்துவேன் எனவும், அமைச்சரவையில் கூடுதல் உறுப்பினர்களை இணைத்து வாக்குறுதியை மீறப் போவதில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மொனராகலை சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் வேலைத்திட்டம், இன்று (07) முன்னெடுக்கப்பட்டது. இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஒரே குழுவாக இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அனைத்து பின்னடைவுகளையும் குழுவாக நிவர்த்தி செய்வது கூட்டுப் பொறுப்பாகும்.

குறைபாடுகளை மாத்திரம் விமர்சித்தால் அது குறித்த நபரின் திறமையின்மையையே வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மக்கள் சார்பாக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பது எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்

0 Comments: