ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலிஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவரின் வேண்டுக்கோளுக்கு அமைய பாராளுமன்றத்தில் இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள் கறுப்பு நிற ஆடையில் அமர்வில் கலந்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.