ரம்புக்கனை சம்பவம் – பொலிஸ் மா அதிபருக்கு மனித உரிமை ஆணைக்குழு அழைப்பு

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்தினவை நாளை(22) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது


ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு முன்னெடுக்கும் விசாரணைக்கமையவே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ,மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கேகாலை மற்றும் ரம்புக்கனை பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கும் இதன் போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.