Top News

"எரிவாயு சிலிண்டர்களுக்கு இனி தட்டுப்பாடு இல்லை" -லிட்ரோ நிறுவனம்


எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


நாடளாவிய ரீதியில் தற்போது விநியோகத்திற்கு தேவையான எரிவாயு சிலிண்டர்கள் உள்ளன. இதன் காரணமாக மக்கள் வரிசைகளில் காத்திருக்கத் தேவையில்லை.


இதேவேளை, சிறிய அளவிலான வர்த்தக நிலையங்களுக்கும் அடுத்த வாரத்தில் இருந்து தட்டுப்பாடின்றி எரிவாயு விநியோகிக்கப்படும் என்று நிறுவனம் அறிவித்திருக்கின்றது.


கடந்த காலங்களில் நாளாந்த எரிவாயு சிலிண்டர்களுக்கான கேள்வி சுமார் இரண்டு இலட்சமாகக் காணப்பட்டது.


எனினும், தற்போது அந்த எண்ணிக்கை 90 ஆயிரமாக காணப்படுகின்றது. இதன்படி, நிறுவனம் தற்போது நாளாந்தம் 90 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கின்றது.


எனினும், இரண்டரைக் கிலோ எடைகொண்ட எரிவாயு சிலிண்டர்களைப் பகிர்ந்தளிப்பதில் சிறு தாமதம் நிலவுதாகவும் லிற்றோ எரிவாயு நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

Post a Comment

Previous Post Next Post