ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது கொள்கை
விளக்க உரையில் முன்வைத்த வேலைத்திட்டங்கள் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுமென மின்சார அபிவிருத்தித் துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய கொள்கை விளக்க உரை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; காலத்துக்குப் பொருத்தமான மிகச்சிறந்த கொள்கை விளக்க உரையை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் நிகழ்த்தினார். நாட்டுக்காக அவர் மேற்கொண்டுள்ள மற்றும் மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் அவர் இந்த உரையின் போது தெளிவாக விளக்கியுள்ளார்.
இன்னும் இரண்டு வருடங்களில் அந்த வேலைத் திட்டங்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படும் அதனைத் தொடர்ந்து நாடு செழிப்பாக முன்னேற்றமடையும் என்பதே எமது நம்பிக்கை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தா
Post a Comment