Headlines
Loading...
நெருக்கடி நிலைமைக்குப் பின்னர், இலங்கை மீண்டும் தலை நிமிர்ந்தது.

நெருக்கடி நிலைமைக்குப் பின்னர், இலங்கை மீண்டும் தலை நிமிர்ந்தது.

 




நெருக்கடி நிலைக்குப் பின்னர் சமகால அரசாங்கம் பல

 நிவாரணங்களை மக்களுக்கு வழங்கியுள்ளது.


நெருக்கடி நிலைமைக்குப் பின்னர், மீண்டும் தலைநிமிர்ந்துள்ள இலங்கை மக்களைக் கேந்திரமாகக் கொண்டு நடவடிக்கைகளை சமகால அரசாங்கம் மேற்கொண்டுவருவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் கீழ் பல நிவாரணங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த வருடம் ஆரம்பமானது முதல் வழங்கப்பட்ட நிவாரணப் பொதி, வரவு செலவுத் திட்ட நிவாரணம் மற்றும் அரச தனியார் துறைகளை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் நிவாரணங்கள், இதில் முக்கியமானவையாகும். அரச ஊழியர்கள் மற்றும் அரசுடன் ஒன்றிணைந்த நிறுவன ஊழியர்களுக்காக 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு ஜனவரி மாதம் தொடக்கம் வழங்கப்படுகின்றது.


இந்தக் கொடுப்பனவு சம்பளம் அதிகரிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த 5 ஆயிரம் கொடுப்பனவு ஓய்வூதியக் காரர்களுக்கும் வழங்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.


ஊனமுற்ற படைவீரர்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக ஒரு கிலோ நெல்லுக்கு 75 ரூபா நிவாரண விலையும் சமுர்த்தி பயனாளிகளுக்கு ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது.


தோட்டத் தொழிலாளர்களுக்க 15 கிலோ கோதுமை மா நிவாரணமாக வழங்கப்படுவது பொதுமக்களுக்குக் கிடைத்த பாரிய வெற்றியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.


'நாம் பயிரிடுவோம் - நாட்டை மேம்படுத்துவோம்' என்ற எண்ணக்கருவிற்கு அமைவாக மனை உற்பத்தித் திட்டத்தில் 20 பேச்சசிற்கும் குறைவான காணிக்காக 5 ஆயிரம் ரூபாவும் 20 பேச்சிற்கு மேற்பட்ட உற்பத்திக் காணிகளுக்கு 10 ஆயிரம் ரூபாவும் ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.


அனைத்து மருந்து மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்காக இறக்குமதி வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணங்களில் முக்கியமானதாகம்.அத்தோடு அரசாங்கம் மக்களுக்கு வழங்கியுள்ளமை தேசிய விவசாயிகள் மற்றும் உற்பத்தியைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகும் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 Comments: