கிளிநொச்சியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!




கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட பிரமந்தனாறு மயில்வாகனபுரம் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று மதியம் 2.30 மணியளவில் சமையல் செய்து கொண்டிருக்கையில் இடம்பெற்றுள்ளது.


திடீர் என சத்தம்கேட்டதையடுத்து வீட்டிலிருந்து வெளியில் ஒடிவந்ததாகவும், பின்னர் தனது கணவருக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியதாகவும் பெண்மணி தெரிவித்துள்ளார்.


அதனையடுத்து உடன் வீட்டுக்குவந்த கணவன் அடுப்பின் ரெகுலேட்டரை அகற்றிவிட்டதாகவும், பின்னர் தருமபுரம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.


தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அடுப்பு வெடிப்பு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டனர். பின்னர் தடையவியல் காவல்துறையினரும் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்