Top News

சீமெந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்க போவது இவ்வாறு தான்..



சீமெந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக சீமெந்து

இறக்குமதியாளர்களும், உள்ளூர் உற்பத்தியாளர்களும் தெரிவிக்கின்றனர்.


டொலர் இல்லாதமை காரணமாக சீமெந்து இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


முன்னைய காலத்தை விடவும் தற்போது சீமெந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.


இவ்வாறான நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி இரண்டு இலட்சம் சீமெந்து பொதிகளைத் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டுக்கு வரவுள்ளது.


எனவே, எதிர்வரும் 22 ஆம் திகதியின் பின்னர் சீமெந்து தட்டுப்பாடு குறைவடையும் என சீமெந்து இறக்குமதியாளர்களும், உள்ளூர் உற்பத்தியாளர்களும் தெரிவிக்கின்றனர்

Post a Comment

Previous Post Next Post