Headlines
Loading...
   25 நவீன அம்பியூலன்ஸ் வண்டிகள்

25 நவீன அம்பியூலன்ஸ் வண்டிகள்



சுமார் 800 மில்லியன் ரூபா பெறுமதியான 25 நவீன அம்பியூலன்ஸ் வண்டிகள் மற்றும் 38 கெப் வண்டிகள் இன்று (17) வைத்தியசாலைகள் மற்றும் பிராந்திய சுகாதார அதிகாரி அலுவலகங்களுக்கு கையளிக்கப்பட்டன.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் இந்த நோயாளர் காவு வண்டிகள் மற்றும் கெப் வண்டிகள் விநியோகிக்கப்பட்டன.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சுகாதார அமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் நிதியில் இவை வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

குறித்த அம்பியூலன்ஸ் வண்டிகள் தொலைதூர பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

0 Comments: