Top News

மேலும் 28 பேர் பலி இன்றைய கொவிட் பாதிப்பு முழு விபரம்






நாட்டில் இன்றைய தினம் 1,287 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.




இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 617,189 ஆக அதிகரித்துள்ளது.




இதேவேளை, கொவிட் தொற்றுக்கான மேலும் 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையின் படி குறித்த மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.




அதன்படி, நாட்டில் இதுவரை 15,572 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.




இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 550 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.




இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 580,770 ஆக அதிகரித்துள்ளது.


Post a Comment

Previous Post Next Post