இலங்கையில் ஆண்டுதோறும் 500 பேர் வரை நீரில் மூழ்கி பலி!
நாட்டில் ஆண்டு தோறும் நீரில் மூழ்கி ஐநூறு பேர் வரையில் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பண்டாரவளை - அட்டம்பிட்டி கெரண்டி எல்ல பிரதேசத்தில் நீராடச் சென்று ஐந்து பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையில் நீரில் மூழ்கி 37 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
கடந்த காலங்களில் கோவிட் பெருந்தொற்று காரணமாக வீடுகளில் முடங்கியிருந்த மக்கள், தங்களது உறவினர்களுடன் சுற்றுலா செல்லத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு சுற்றுலா செல்லும் போது மக்கள் கவனயீனமாக நீராடச் செல்லும் காரணத்தினால் மரணங்கள் ஆண்டுதோறும் சம்பவிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
0 Comments: