வவுனியா பல்கலைக்கழகம் அங்குரார்ப்பணம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால், வவுனியா பல்கலைக்கழகம், இன்று (11) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா பல்கலைக்கழகம் 1991 ஆம் ஆண்டு வட மாகாண இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்டு, 1997 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த வருடம் ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் இலங்கையின் 17 ஆவது பல்கலைக்கழகமாக இது தரமுயர்த்தப்பட்டிருந்தது.
இதன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை ஜனாதிபதி இன்று அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அரச அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.
வவுனியா, பம்பைமடு பகுதியிலேயே பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
/chat.whatsapp.com/Kv5HRUuukU98aIf0PZ4g7B
0 Comments: