Headlines
Loading...
   அறிகுறிகள் இல்லாத தொற்றாளர்கள் அதிகம்

அறிகுறிகள் இல்லாத தொற்றாளர்கள் அதிகம்





ஒமிக்ரோன் மாறுபாட்டின் தன்மை காரணமாக தற்போது சமூகத்தில் குறிப்பிட்ட சதவீத அறிகுறியற்ற தொற்றாளர்கள் இருக்கலாம் என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான போதிலும், குறிப்பிட்ட சதவீதம் பேர் அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் இருக்கலாம் என்றும் இதன் காரணமாக தொற்றுநோயைக் கண்டறிவதை கடினமாக்குகிறது என்றார்.

இந்த நபர்கள் சமூகத்தில் நம்மிடையே இருக்க முடியும் என்றும், அத்தகைய நபர்களிடமிருந்து அனைவருக்கும் வைரஸ் தொற்று ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டார்.

அத்தகைய நபர்களால் வயதான உறவினர்கள் அல்லது பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.


0 Comments: