Headlines
Loading...
   உக்ரைன் தலைநகரில் நடப்பது என்ன?

உக்ரைன் தலைநகரில் நடப்பது என்ன?




உக்ரைன் தலைநகரான கியேவின் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கில் சண்டை நடைபெறுகின்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கப்படுகின்றது.

சண்டைகள் அனைத்தும் இப்போது நகர எல்லைக்குள் நடக்கிறது என்று CNN செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இந்த சண்டை நகரத்தின் மையத்தை அடைந்ததாகத் தெரியவில்லை.

குடியிருப்புப் பகுதிகள் இன்னும் குறிவைக்கப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. ஆனால் பல்வேறு திசைகளில் இருந்து வெடிப்புச் சத்தங்கள் கேட்கின்றதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியப் படைகள் உக்ரைனில் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையத்தைத் தாக்க முயற்சித்ததாக Interfax Ukraine செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது, அதே நேரத்தில் உக்ரேனிய இராணுவம் Kyiv இராணுவத் தளத்தின் மீதான தாக்குதலை முறியடித்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

பெரெஸ்டீஸ்கா மெட்ரோ நிலையத்தை கடந்து செல்லும் பெரெமோஹி அவென்யூவில் ரஷ்ய முன்னேற்றத்தை நிறுத்தியதாகவும் உக்ரேனிய அரசாங்கம் கூறுகிறது. அங்கு கடும் சண்டையும் நடந்துள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. (R)

0 Comments: