Headlines
Loading...
  வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் மனு பரிசீலனைக்கு திகதியிடப்பட்டது.

வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் மனு பரிசீலனைக்கு திகதியிடப்பட்டது.




குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 17ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




கருத்தடை சத்திர சிகிச்சை செய்ததாக போலியான குற்றச்சாட்டில் தனக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும், தமக்கு நிலுவை சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடக்கோரி, வைத்தியர் ஷாஃபி இந்த நீதிப் பேராணை மனுவை தாக்கல் செய்துள்ளார்.




இந்த மனுவின் பிரதிவாதிகள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான மேலதிக பிரதி மன்றாடியார் நாயகம், இந்த மனுவும் அது சார்ந்த ஆவணங்களும் நேற்றைய தினமே தமக்கு கிடைக்கப்பெற்றதாகவும், இதனை பரிசீலிக்க தமக்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.




இந்நிலையில், மேற்படி கோரிக்கையை பரிசீலித்த நீதியரசர்கள் அதற்கு அனுமதியளித்த அதேவேளை, மனுவை எதிர்வரும் 17ஆம் திகதி பரிசீலனைக்கு எடுக்க உத்தரவிட்டனர்.


0 Comments: