Top News

'அல்லா ஹு அக்பர்' முழக்கத்தை ஏன் எழுப்பினேன்..? மாணவி முஸ்கான் பேட்டி



கர்நாடக மாநிலம் மாண்டியா நகரில், இளைஞர்களுக்கு மத்தியில் 'அல்லா ஹு அக்பர்' என முழக்கமிட்ட கர்நாடக மாணவியின் வீடியோ வைரலானது சந்தேகத்திற்கு இடமற்றது.



கல்லூரில் மற்றவர்கள் காவி துண்டோ அல்லது தலைப்பாகையோ அணிவதில் அவருக்கு எந்த சிக்கலும் இல்லை. அது அவர் அணியும் ஹிஜாப் போலவே அவர் கருதுகிறார்.

"அவர்கள் என்ன அணிகின்றனர் என்பதில் எனக்கு எந்த பிரச்னை இல்லை," என்று பிபிசி இந்தியிடம் தன்னை நோக்கி 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷமிட்ட இளைஞர்கள் கூட்டத்திற்கு மத்தியில் கையை உயர்த்தி முழக்கமிட்ட முஸ்கான் கான் கூறுகிறார்.

எனக்கு வேண்டியதெல்லாம் என் உரிமைகளுக்கும், கல்விக்கும் நான் துணை நின்ற வேண்டும் என்பதே", என்று மாண்டியா நகரின் புறப்பகுதியில் எளிமையான வீட்டிலிருந்து அவர் கூறுகிறார்.

அவரது தந்தை ஒரு வியாபாரி; அவருக்கு மூத்த சகோதரரும், இளைய சகோதரியும் உள்ளனர். சல்வார் கமீஸ் அணிந்து கொண்டு, ஒரு துப்பட்டாவை ஹிஜாப் போல் தலையில் சுற்றியுள்ளார். அவரது கல்லூரி வளாகத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில் இருப்பதை விட அவர் உயரமாக தெரிகிறார்.

"நான் வகுப்புக்கு செல்லவே கல்லூரியை அடைந்தேன். அங்கு பல இளைஞர்கள் காவி துண்டுகளை அணிந்திருப்பதைப் பார்த்தேன். அவர்கள் என்னை வழிமறிந்தனர். நான் கல்லூரி வளாகத்திற்குள் நுழைய முடியாது என்று அவர்கள் கூறினார்கள்," என்று கூறுகிறார்.

அவர் நுழைவாயிலை அடையும்போது, அங்குள்ள இளைஞர்கள் புர்கா அணிந்து வந்த மூன்று, நான்கு மாணவிகளை திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தனர்.

'அல்லா ஹு அக்பர்' முழக்கமிட்ட கர்நாடக மாணவிக்கு பாகிஸ்தானில் ஆதரவு - பெங்களூரு வழக்கு என்ன ஆனது?

ஹிஜாப் சர்ச்சை: வன்முறையால் கல்லூரிகள் முடக்கம் - முஸ்லிம் பெண்களுக்கு மலாலா ஆதரவு

"அவர்களிடம் மனிதநேயம் இல்லை. அவர்கள் அவர்களின் துண்டை சுற்றிக்கொண்டு, ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர். அவர்கள் நான் புர்காவை கழற்ற வேண்டும் என்று கூறினார்கள். அப்போது தான் , கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவேன் என்று கூறினார். அவர்கள் என்னை மிரட்டனர். அப்போதுதான் நான் தீர்மானமாக இருந்தேன். நான் எப்படியோ கல்லூரிக்குள் நுழைந்தேன்," என்றார்.

அவர் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, வகுப்பறைக்குள் நுழைய முயன்றபோது, " 30, 40 இளைஞர்கள் என்னை நோக்கி ஒடி வந்தனர். அவர்கள் ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்" என்று கோஷமிட்டனர். நான் என் புர்காவை கழற்ற வேண்டும் என்று மீண்டும் கோஷமிட்டனர். இல்லையெனில், நான் வெளியில் செல்ல வேண்டும்," என்று அவர் கூறினார்.

"ஆம்! நான் 'அல்லா ஹு அக்பர்' என்று முழக்கமிட்டேன். எனக்கு பயம் ஏற்பட்டப்போது, அல்லாவை அழைத்தேன். எனக்கு அது தன்னம்பிக்கையை அழைத்தது," என்கிறார் முஸ்கான்.

அதன் பிறகே, கல்லூரி முதல்வரும், பேராசிரியர்களும் விரைந்து வந்து, எனக்கு பாதுகாப்பு அளித்து, வகுப்பறைக்குள் அழைத்து சென்றனர்.

இந்த சூழ்நிலையை மேலும் தீவிரப்படுத்தும் இளைஞர்களை மீது அவர் கோபம் கொள்கிறார். அவர்களில் பலர் வெளியில் இருக்கும் நபர்கள். "உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதனை மதப் பிரச்னை ஆக்க வேண்டாம்," என்றார்.

அவர் இந்துக்களையும், முஸ்லிம்களையும் வேறுபடுத்தி பார்க்கவில்லை என்று மிகவும் தெளிவாக கூறுகிறார். நான் என்னுடைய உரிமைகளுக்கும் கல்விக்கும் துணை நிற்கிறேன். நான் ஹிஜாப் அணிந்துக்கொண்டிருப்பதால், இவர்கள் நான் கல்வி கற்ற அனுமதி அளிக்க மறுக்கின்றனர்," என்கிறார்.

சமூக ஊடகத்திலும், பிற ஊடகங்களிலும் தனக்கு கிடைக்கும் பாராட்டுகளைப் பற்றியும் அவர் குறிப்பிடுகிறார். "அவர்கள் என் மீது மிகுந்த அன்பு செலுத்துகின்றனர். எனக்கு அது பெரும் பலத்தை அளிக்கிறது. அவர்களுக்கு மிகுந்த நன்றிகள்'.

நீங்கள் இடது கையை தூக்கி 'அல்லா ஹு அகபர்' என்று முழக்கமிட்டீர்கள். நீங்கள் இடது கை பழக்கம் உள்ளவரா?

இந்த நேர்காணலில் முதன் முறையாக முஸ்கான் சிரித்தார். தொடர்ந்து அவர், " இல்லை. எனக்கு இடது கை பழக்கமில்லை. அங்கு இருந்த பரபரப்பு காரணமாக, தானாக என் இடது கையை உயர்த்தினேன்".

Post a Comment

Previous Post Next Post