எண்ணெய் விலையை அதிகரிக்க வேண்டும் – அஜித் நிவாட் கப்ரால்
தற்போதைய நிதி நிலைமையை கருத்திற் கொண்டு அரசாங்கம் நிச்சயமாக எண்ணெய் விலையை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் விலையை அதிகரிக்காமல் பெற்றோலிய கூட்டுத்தாபனம் உள்ளிட்ட நிறுவனங்களை பராமரிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனம் வியாபாரம் செய்வதால் அதிக விலைக்கு எண்ணையை கொள்வனவு செய்து குறைந்த விலைக்கு நுகர்வோருக்கு வழங்க முடியாது என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் ஒப்பிடும் போது இலங்கையில் எண்ணெய் விலைகள் மிகவும் குறைவாக இருப்பதாக தெரிவித்த அஜித் நிவார்ட் கப்ரால்,எரிபொருள் விலையை அதிகரிப்பதன் மூலமும் ஏனைய உத்திகளைக் கையாள்வதன் மூலமும் வாழ்க்கைச் செலவை நிர்வகிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, எரிபொருள் விலையை அதிகரிக்க அல்லது வரிச் சலுகை வழங்குமாறு நிதி அமைச்சிடம் விசேட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
0 Comments: