Headlines
Loading...
  தேசிய ஊடகத்திலிருந்து தமிழ் மற்றும் ஆங்கில மொழி நீக்கம் - பிரிவினைவாதத்தின் மற்றுமொரு நடவடிக்கை, மனோ

தேசிய ஊடகத்திலிருந்து தமிழ் மற்றும் ஆங்கில மொழி நீக்கம் - பிரிவினைவாதத்தின் மற்றுமொரு நடவடிக்கை, மனோ

இலங்கை அரச ஊடகமான ரூபவாஹினி தொலைகாட்சி அலைவரிசையின் அடையாள குறியீட்டில் இருந்து தமிழ் மற்றும் ஆங்கில மொழி அகற்றப்பட்டமை பிரிவினைவாதத்தின் மற்றுமொரு நடவடிக்கை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.



"தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபணம், "தேசிய" மற்றும் "இணைப்பு" மொழிகளை தனது "அடையாள குறியீட்டில்" இருந்து திடீரென தவிர்த்து கொண்டிருப்பது, கண்டிக்கதக்கது.

தனியார் ஊடக நிறுவனங்கள் தங்களது, அடையாளத்தை எவ்விதமாக காட்டி, திருத்திக்கொண்டாலும், அரசாங்கத்தின் தேசிய ஊடக நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதை ஏற்க முடியாது.

அரச ஊடகத்தின் குறியீட்டிலிருந்து தமிழ் மற்றும் ஆங்கில மொழி நீக்கப்பட்டமை தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகபெருமவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த விவகாரத்தை ஆழமாக சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments: