சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை
மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவுக்கு அமைய சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 20 மாதங்களுக்குப் பின்னர், அவர் வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments: