சமுர்த்தி பயனாளர்களுக்கான நற்செய்தி

ADMIN
0 minute read
0





சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்கப்படும் சமுர்த்தி மேலதிக கொடுப்பனவை நூற்றுக்கு 28 சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.




அதற்கமைய, இந்த அதிகரிப்பு நாளை (14)முதல் நடைமுறைப்படுத்தப்படுமென இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தாா்.




இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,




நாட்டில் 17 இலட்சத்து 67 ஆயிரம் குடும்பங்கள் சமுர்த்தி கொடுப்பனவை பெறுகின்றன. இவர்களுக்காக சமுர்த்தி மேலதிக கொடுப்பனவை 28 சதவீதமாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, இதுவரையில் வழங்கப்பட்ட 3,500 ரூபா மேலதிக கொடுப்பனவு பெற்ற குடும்பங்களுக்கான கொடுப்பனவு 4, 500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.




இதுவரையில் 2, 500 ரூபா மேலதிக கொடுப்பனவை பெற்றுக்கொண்ட குடும்பமொன்றுக்கு 3,200 மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் . 1,500 ரூபா பெற்ற குடும்பத்துக்கு 1,900 ரூபா பெற்றுக்கொடுக்கப்படும்.


To Top