Top News

மரக்கறி விலையில் வீழ்ச்சி

சிறந்த விளைச்சல் கிடைத்துள்ளதால் மொத்த விற்பனை நிலையங்களில் மரக்கறிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றன.


தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் பீட்ரூட் 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஏனைய மரக்கறிகளின் விலையும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாரம் 40 வீதத்தால் குறைவடைந்துள்ளன.


கெப்பட்டிப்பொல பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தக்காளி விலை 90 ரூபாவாக குறைவடைந்துள்ளது.


தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் கெரட், போஞ்சி, லீக்ஸ், கோவா உள்ளிட்ட பல மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Previous Post Next Post