Headlines
Loading...
   தடுப்பூசி அட்டையை தேடியபோது சஹரானின் படங்கள்

தடுப்பூசி அட்டையை தேடியபோது சஹரானின் படங்கள்






க.சரவணன்

மட்டக்களப்பு - கொழும்பு வீதியிலுள்ள ரிதிதென்னை பொலிஸ் சோதனைச் சாவடியில், அலைபேசியில் சஹரான் காசீமின் படங்களை வைத்திருந்த 9 பேர் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

அக்குரனையில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த வான் ஒன்றை இராணுவத்தினர், இன்று (12) நிறுத்தி சோதனையிட்டபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதிச் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இராணுவத்தினர், கொரோனா தடுப்பூசி ஏற்றியுள்ளமை தொடர்பில் தடுப்பூசி அட்டையைக் கேட்டு சோதனையிட்டனர்.

இதன் போது அதில் பிரயாணித்த முகமட்பாரூக் முகமட் ஆசாத் என்பவர் தனது அலைபேசியில் தடுப்பூசி ஏற்றியதற்கான அட்டையின் படத்தை காட்டமுற்பட்டார்.

இதன்போது அலைபேசியில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதியான சஹரான் காசீம் படங்கள் உள்ளிட்டவையை வைத்திருந்ததை கண்டுள்ள இராணுவத்தினர் அவருடன் பயணித்த 9 பேரையும் தடுத்திநிறுத்தினர்.

இதனையடுத்து அவர்களை விசாரணையின் பின்னர் விடுதலை செய்தனர்.

0 Comments: