துறைமுகத்திற்கு வந்துள்ள எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்த அரசாங்கத்திடம் பணம் இல்லை ; எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில

ADMIN
1 minute read
0





கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தி

வைக்கப்பட்டுள்ள மூன்று எரிபொருள் கப்பல்களை விடுவிப்பதற்கு பணம் செலுத்துவதற்கு தேவையான நிதி அரசாங்கத்திடம் இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.




ஒரு எரிபொருள் கப்பலுக்கான கட்டணத்தை செலுத்துவதற்கு மட்டுமே அரசாங்கத்திடம் பணம் இருப்பதாக அவர்

தெரிவித்தார்.




ஒரு கப்பலில் இருந்து பெற்றோலை இறக்குவதற்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், டீசல் மற்றும் எரிபொருளைக் கொண்ட மற்ற இரண்டு கப்பல்களை விடுவிக்க போதிய நிதி இல்லை.







எரிபொருளை செலுத்துவதற்கு அரசாங்கத்திடம் அமெரிக்க டொலர்கள் இல்லையென தெரிவித்த அமைச்சர் கம்மன்பில, இதனால் இலங்கையில் எதிர்வரும் காலங்களில் எரிபொருள் தீர்ந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.




நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்த அவர், எரிபொருள் நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட விநியோகத்தில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.




முன்னர் ஒரு இடத்திற்கு மூன்று எரிபொருள் பவுசர்கள் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தற்போது ஒன்று அல்லது இரண்டு எரிபொருள் பவுசர்கள் மட்டுமே அனுப்பப்படுவதாக அவர் கூறினார்.


Post a Comment

0 Comments

Post a Comment (0)