பொருளாதார நெருக்கடி குறித்து எதிர்கட்சிகள் கூட்டறிக்கை
நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு நிரந்தர தீர்வொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்கட்சி பிரதிநிதிகள் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினை குறித்து, 4 பிரதான சவால்களை, எதிர்கட்சிகள் சுட்டுக்காட்டியுள்ளன.
அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பாரிய சவால்களை தாம் ஏற்றுக்கொள்வதுடன், இந்த நிர்கதியான தருணத்தில் நாடு என்ற விதத்தில் அனைவரும் ஒன்றிணைந்து இந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பு வெற்றி கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய உள்ளிட்ட சிலர் இதில் கையொப்பமிட்டுள்ளனர்.
0 Comments: