Headlines
Loading...
24 மணி நேரமும் தடையின்றி மின்சாரத்தை வழங்க நடவடிக்கை!

24 மணி நேரமும் தடையின்றி மின்சாரத்தை வழங்க நடவடிக்கை!





நாட்டில் வைத்தியசாலைகள், பாதுகாப்பு இடங்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் போன்ற 24 மணி நேரமும் மின்சாரம் அவசியமான இடங்களுக்கு தடையின்றி தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று ஆலோசனை வழங்கியுள்ளார்.


இதற்காக தொடர்ச்சியாக இயங்கக்கூடிய விசேட செயற்பாட்டு மையத்தை நிறுவுமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.


இவ்வாறான பின்னணியில் அவசரமாக மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் திட்டமிடுவதாக இலங்கை மின்சார சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.


அவசர மின்சார கொள்வனவுக்கான உடன்படிக்கையைக் கைச்சாத்திட அரசாங்கம் தற்போது தயாராகி வருகின்றது என கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

0 Comments: