முகநூல் போதைப்பொருள் விருந்து : 39 பேர் கைது
வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் போதைப்பொருள் விருந்து நடத்திய 39 சந்தேக நபர்கள் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வென்னப்புவ பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்து மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முகநூல் சமூக வலைத்தளம் ஊடாக சந்தேக நபர்களால் இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
0 Comments: